sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்கா விசா மோசடியில் சிக்கிய 10,000 மாணவர்கள்

அமெரிக்கா விசா மோசடியில் சிக்கிய 10,000 மாணவர்கள்

அமெரிக்கா விசா மோசடியில் சிக்கிய 10,000 மாணவர்கள்


UPDATED : மே 14, 2026 08:55 PM

ADDED : மே 14, 2026 08:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 14, 2026 08:55 PM ADDED : மே 14, 2026 08:58 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க்:
மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்டுள்ள இந்தியர்கள் உட்பட 10,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களை கண்காணித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்காவில் 'ஸ்டூடண்ட் விசாவில் கல்வி பயிலும் மாணவர்கள், படிப்பை முடித்த பிறகு ஓ.பி.டி., எனும் பயிற்சி திட்டத்தின் கீழ் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை அங்குள்ள நிறுவனங்களில் பணி அனுபவம் பெற அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த அனுபவத்தை வைத்தே வேலைக்கான விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்நிலையில், இந்த திட்டத்தை பயன்படுத்தி மோசடி நடந்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கத் துறை கூறியுள்ளது. ஆன்லைன் மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபடும் சில நிறுவனங்கள், குறிப்பாக இந்தியாவில் இருந்து செயல்படுபவை, இந்த மாணவர்களுக்கு வேலை அளித்துள்ளது தெரியவந்துள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். அதனால், இந்த மாணவர்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us