மூன்று கல்லுாரிகளில் முகாம் 108 பேருக்கு கல்விக்கடன்
மூன்று கல்லுாரிகளில் முகாம் 108 பேருக்கு கல்விக்கடன்
UPDATED : செப் 25, 2024 12:00 AM
ADDED : செப் 25, 2024 08:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கோவை மாவட்டத்தில் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவியர் நலனுக்கு, மாபெரும் கல்விக் கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, கடந்த 10ம் தேதி, ஈச்சனாரி கற்பகம் உயர்கல்வி அகாடமி, 11ம் தேதி, பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, 12ம் தேதி பி.எஸ்.ஜி., பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரியில், கல்விக் கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டன.
இதில், 108 மாணவர்களுக்கு, 13 வங்கிகள் வாயிலாக, 5.85 கோடி மதிப்பில் கல்விக்கடன் வழங்கப்பட்டது.