தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்த ரூ.1,082 கோடி ஒதுக்கீடு

பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்த ரூ.1,082 கோடி ஒதுக்கீடு

பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்த ரூ.1,082 கோடி ஒதுக்கீடு


UPDATED : ஆக 26, 2011 12:00 AM

ADDED : ஆக 27, 2011 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2011 12:00 AM ADDED : ஆக 27, 2011 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுப்பாடத்திட்டம் மட்டுமே சமச்சீர் மற்றும் தரமான கல்விக்குப் போதுமானதாக இருக்காது என்பதால், பள்ளிக் கல்வித்தரத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா இதுகுறித்துப் பேசுகையில், "700க்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்; 18,000 ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர்" என, அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

மத்திய அரசுடன் இணைந்து அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதற்காக 1,082 கோடியே 71 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற திட்டங்களுக்கு மாநில அரசு நிதியுதவி செய்யும்.

சமச்சீர் கல்வி தொடர்பான முத்துக்குமரன் குழு அறிக்கையில், பொதுப்பாடத்திட்டம் மட்டுமே சமச்சீர் கல்வி ஆகாது; அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கட்டாயம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனது தலைமையிலான அரசு இதை நன்குணர்ந்துள்ளது. எனவே, நடப்பு ஆண்டுக்காக 1,082 கோடியே 71 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்த என்.ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து "பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் செயல்படுத்தப்படும். பாடத்துடன் தொடர்புடைய இதர கூடுதல் திறன்கள் கம்ப்யூட்டர் வழிக் கல்வியுடன் வழங்கப்படும்.

செயற்கைக்கோள் தொழில்நுட்ப உதவியுடன் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு, போதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 717 வயது வரையிலான மாணவர்களுக்கு அவர்களின் புத்திக்கூர்மை, கூர்ந்து கவனிக்கும் திறனை மேம்படுத்துவதற்காக செஸ் விளையாடக் கற்றுக் கொடுக்கப்படும்.

புத்தகச் சுமையைக் குறைக்கும் விதத்தில் காலாண்டுப் பருவத்திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் பாடப்புத்தகங்கள் அந்தந்தப் பருவத்துக்கு தேவையான பாடங்களை மட்டும் கொண்டு இருக்கும் படியாக தனித்தனியாகக் கொடுக்கப்படும். குறைந்த அளவு புத்தகங்களைக் கொண்டு செல்வதன் மூலம் மாணவர்களின் தேவையற்ற அச்சம், மன அழுத்தத்தை குறைக்க இது வகை செய்யும்.

தரம் உயர்த்தலின் ஒரு பகுதியாக அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப்பையும், ஜாமென்ட்ரி பாக்ஸும் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அவர்களின் புகைப்படம் மற்றும் ரகசியக்குறியீட்டு எண் இணைத்து வழங்கப்படும். இதன் மூலம் மதிப்பெண் பட்டியலில் முறைகேடு, தவறாகப் பயன்படுத்துதல் குறைக்கப்படும்.

ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியம், தொழிற்பயிற்சி, விளையாட்டுத்துறைகளில் பயிற்றுவிக்க 16,000 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இத்திட்டங்களில் பெரும்பகுதி நடப்பாண்டே, பள்ளிக் கல்வித்துறையின் மூலம் செயல்படுத்தப்படும். மாணவர்களுக்கு உகந்த சூழலை வழங்குவதன் மூலம் நிஜமான சமச்சீர் கல்வியை இந்த அரசு வழங்கும்.

இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us