தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்: 11 மாவட்டத்தினருக்கு வாய்ப்பு

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்: 11 மாவட்டத்தினருக்கு வாய்ப்பு

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்: 11 மாவட்டத்தினருக்கு வாய்ப்பு


UPDATED : டிச 05, 2009 12:00 AM

ADDED : டிச 05, 2009 01:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 05, 2009 12:00 AM ADDED : டிச 05, 2009 01:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இது குறித்து கோவை ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலக இயக்குனர் கர்னல் வர்க்கீஸ் கூறியுள்ளதாவது;


சோல்ஜர் டெக்னிக்கல், நர்சிங் உதவியாளர், சோல்ஜர் ஜெனரல் டூட்டி, டிரேட்ஸ்மேன், சோல்ஜர் கிளார்க், ஸ்டோர் கீப்பர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஜனவரி 5 முதல் 11 வரை நடக்கும் தேர்வில் 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.


சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டன்ட் பணிகளுக்கு தேனி, தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, கோவை, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, மதுரை, திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ஜனவரி 5 ல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.


சோல்ஜர் ஜெனரல் டூட்டிக்கு தேனி, தர்மபுரி, நாமக்கல், நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ஜனவரி 6, ஈரோடு,சேலம், மதுரை, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்தவர்களுக்கு ஜனவரி 7 ல் சான்றிதழ் சரிபார்க்கப்படுகிறது. டிரேட்ஸ் மேன் பணிக்கு ஜனவரி 8, சோல்ஜர் ஜெனரல் டூட்டி பிரிவினருக்கு ஜனவரி 9, சோல்ஜர் கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பணிக்கு ஜனவரி 10 ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.


உடற் தகுதி தேர்வு அந்தந்த பிரிவிற்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அடுத்தநாள் நடக்கிறது. விண்ணப்பதாரர்கள் காலை 5.30 மணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு கோவையில் உள்ள ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகத்தை 0422-2222022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us