தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விதிமீறிய கட்டடங்கள் - 120 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

விதிமீறிய கட்டடங்கள் - 120 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

விதிமீறிய கட்டடங்கள் - 120 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்


UPDATED : ஆக 02, 2014 12:00 AM

ADDED : ஆக 02, 2014 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2014 12:00 AM ADDED : ஆக 02, 2014 11:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரெட்டியார்சத்திரம்: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில், விதிமீறி கட்டடங்கள் கட்டிய 120 கல்வி நிறுவனங்களுக்கு, நகர ஊரமைப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முதற்கட்டமாக, நேற்று திண்டுக்கல்லில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரி அலுவலக கட்டடத்திற்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திண்டுக்கல், சில்வார்பட்டி ஊராட்சியில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் அவ்வப்போது புதிய கட்டடங்கள் கட்டப்பட்டபோதும், வரி செலுத்துவது தொடர்பாக, ஊராட்சிக்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் இடையே பிரச்னை நீடிக்கிறது. இதை விசாரித்த ஐகோர்ட், ஊராட்சி நிர்வாகத்திற்கு வரி செலுத்த உத்தரவிட்டிருந்தது.

கல்லூரி நிர்வாக அனுமதியுடன், கட்டடங்கள் அளவிடப்பட்டு, 2012 ம் ஆண்டு நிலவரப்படி, 64 லட்சம் ரூபாய் வரி செலுத்த வேண்டியிருந்தது. இதில், பாதியளவு தொகை மட்டுமே செலுத்திய நிலையில், மறுநிர்ணயம் செய்ய கல்லூரி நிர்வாகம் விடுத்த கோரிக்கை குறித்த பேச்சுவார்த்தை நடக்கிறது. தற்போது, கூடுதல் கட்டடங்களுக்கு அனுமதி கேட்டு, கல்லூரி நிர்வாகம் விண்ணப்பித்தது. ஊராட்சி அனுமதி வரம்பிற்கு கூடுதல் பரப்பளவு (6 ஆயிரம் சதுரஅடி) என்பதால், நகர ஊரக சீரமைப்புத்துறைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இத்துறையின் துணை இயக்குனர் (பொறுப்பு) நாகேஸ்வரன், மேற்பார்வையாளர் செல்வராஜ் உள்ளிட்டோர், நேற்று காலை 8:50 மணிக்கு கல்லூரிக்கு வந்தனர். கல்லூரி முதல்வர் அலுவலகம், நிர்வாக அலுவலக வளாகத்தைப்பூட்டி, சீல் வைத்தனர். பின், அனுமதி பெறாத கட்டடத்திற்கான நோட்டீஸ் ஒட்டினர். உரிய விளக்கம் அளிக்கும்படி அறிவுறுத்திச் சென்றனர். ஆனாலும், வகுப்புகள் வழக்கம் போல் நடந்தது.

அதிகாரி ஒருவர் கூறுகையில், "மண்டலத்திற்குட்பட்ட 4 மாவட்டங்களில், 120 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு, 3 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. உரிய விளக்கள் அளிக்காத நிறுவனங்கள் மீதான நடவடிக்கை துவங்கியுள்ளது,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us