அரசு கலைக் கல்லூரியில் வரும் 13ம் தேதி இறுதிகட்ட கலந்தாய்வு
அரசு கலைக் கல்லூரியில் வரும் 13ம் தேதி இறுதிகட்ட கலந்தாய்வு
UPDATED : ஆக 06, 2014 12:00 AM
ADDED : ஆக 06, 2014 02:53 PM
விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் இறுதி கட்ட கலந்தாய்வு வரும் 13ம் தேதி நடக்கிறது.
விழுப்புரம் அண்ணா அரசு கல்லூரியில் 2014-15ம் ஆண்டிற்கு, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த ஜூன் 20ம் தேதி துவங்கியது. பல கட்டங்களாக நடந்த கலந்தாய்வுக்குப் பின், இறுதியாக உள்ள காலி இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 13ம் தேதி, காலை 10 மணிக்கு நடக்கிறது.
இக்கல்லூரிக்கு ஏற்கனவே விண்ணப்பித்து, எந்த பிரிவிலும் சேராமல் உள்ள மாணவர்கள் மட்டுமே இறுதி கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இதற்காக 12ம் தேதி காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணிக்குள் விருப்பம் உள்ள மாணவர்கள் தங்களின் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மாணவர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை மேற்கொள்ளப்படும். தகுதியுள்ள மாணவர்கள் வரும் 13ம் தேதி அன்று பிளஸ் 2 மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். இத்தகவலை கல்லூரி முதல்வர் கன்னிகா தெரி வித்துள்ளார்.
