பன்னாட்டு இந்திய குழுமம் துவங்கும் 15 புதிய பள்ளிகள்
பன்னாட்டு இந்திய குழுமம் துவங்கும் 15 புதிய பள்ளிகள்
UPDATED : நவ 29, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
உலகெங்கும் இந்திய பண்பாட்டைப் புகட்டும் உயர்தர கல்வியை பல ஆண்டுகளாக தந்து வரும் குளோபல் இந்தியன் இன்டர்நேஷனல் ஸ்கூல் எனப்படும் பன்னாட்டு இந்திய கல்விக் குழுமம் விரைவில் இந்தியாவில் 15 பள்ளிகளை துவங்கவுள்ளது. இதில் முதல் 5 பள்ளிகள் வரும் 2009ம் ஆண்டு இறுதிக்குள் செயல்பட துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுமம் சிங்கப்பூரைச் சேர்ந்த சேவை அமைப்பாகும். 6 ஆண்டுகளுக்கு முன்பு இது சிங்கப்பூரில் தனது முதல் பன்னாட்டு பள்ளியை இது துவக்கியது. தற்போது 7 நாடுகளில் 15 பள்ளிகளை இது நடத்தி வருகிறது. இவற்றில் சுமார் 17 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதில் 30 நாடுகளைச் சேர்ந்த இந்திய மற்றும் பிற நாட்டு மாணவர்கள் படிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 4 பள்ளிகளும், மலேசியா, ஜப்பான், வியட்னாம், நியூசிலாந்து, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றில் இந்த பள்ளிகள் செயல்படுகின்றன.
இந்தியாவில் முதல் 5 பள்ளிகள் ஐதராபாத், நாக்பூர், ஜோத்பூர், இந்தூர் மற்றும் தானேயில் துவங்கப்படும். நல்ல தரம் என்பதால் இதன் கல்விக் கட்டணம் மிக அதிகமாக இருக்காது என்று பள்ளி தெரிவித்துள்ளது. சமஸ்கிருத ஸ்லோகங்களை பாடப்பகுதியாக இப் பள்ளிகள் தருவது குறிப்பிடத்தக்கது. காந்திய வழி போதனைகளும் இங்கு முக்கியத்துவம் தரப்படுகின்றன.
