தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறை நூலகங்களுக்கு முதல்வர் தந்த 1,500 புத்தகங்கள்

சிறை நூலகங்களுக்கு முதல்வர் தந்த 1,500 புத்தகங்கள்

சிறை நூலகங்களுக்கு முதல்வர் தந்த 1,500 புத்தகங்கள்


UPDATED : அக் 30, 2023 12:00 AM

ADDED : அக் 30, 2023 10:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2023 12:00 AM ADDED : அக் 30, 2023 10:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் உள்ள சிறை நுாலகங்களுக்கு, 1,500 புத்தகங்களை, முதல்வர் ஸ்டாலின் நன்கொடையாக வழங்கினார்.தி.மு.க., தலைவராக, 2018ம் ஆண்டு ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்று முதல் தன்னை சந்திக்க வருவோர், பூங்கொத்து, பொன்னாடைகளை தவிர்த்து, புத்தகங்கள் வழங்க வேண்டுகோள் விடுத்தார். அதன்படி தனக்கு வந்த, 2 லட்சம் புத்தகங்களை, தமிழகம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் வேண்டுகோளை ஏற்று, அவர்களின் நுாலகங்களுக்கு வழங்கி உள்ளார்.தமிழகத்தில் உள்ள சிறைவாசிகள் இடையே, புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களின் மன அழுத்தத்தை போக்கவும், அவர்களின் மனதில் நற்சிந்தனைகளை விதைக்கும் விதமாக, சிறைகளில் நுாலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்நுாலகங்களை மேம்படுத்த, நடப்பாண்டு 2.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறை நுாலகங்களில் புத்தகங்கள் எண்ணிக்கையை உயர்த்த, முதல்வர் தன்னை சந்திக்க வருவோர் வழங்கியவற்றில், 1,500 புத்தகங்களை, நேற்று நன்கொடையாக வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர் ரகுபதி, உள்துறை செயலர் அமுதா, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை துணைத் தலைவர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us