கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 19ல் கல்லுாரிகள் திறப்பு
கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 19ல் கல்லுாரிகள் திறப்பு
UPDATED : ஏப் 09, 2024 12:00 AM
ADDED : ஏப் 09, 2024 11:36 AM

கோவை:
தமிழகத்தில், 2024-25ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் கோடை விடுமுறைக்கு பின், ஜூன் 19ம் தேதி கல்லுாரிகள் துவங்கும் என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
வழக்கமாக, ஏப்., இரண்டாம் வாரத்தில், பருவத்தேர்வுகள் துவங்கப்பட்டு, இறுதியில் முடிக்கப்படும். ஆனால், நடப்பாண்டில் லோக்சபா தேர்தல் முன்னிட்டு, பருவத்தேர்வுகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வரும், 17ம் தேதி ஓட்டு சாவடி மையங்களாக செயல்படும் கல்லுாரி மையங்களை, மாவட்ட தேர்தல் பிரிவினர் வசம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிந்த பின்னரே தேர்வுகள் துவங்கவுள்ள நிலையில், நடப்பாண்டுக்கான இறுதி வேலை நாளை உறுதி செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஒரு பருவத்தில் குறைந்தபட்சம், 90 வேலை நாட்கள் கட்டாயம் இருக்க வேண்டும்; தேர்தல் காரணமாக வேலை நாட்கள் குறையும் சூழலில், இறுதி வேலை நாளை அந்தந்த கல்லுாரி முதல்வர்களே முடிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய கல்வியாண்டுக்கு கல்லுாரிகள், ஜூன் 19ம் தேதி துவங்கும் என, கல்லுாரி கல்வி இயக்குனரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.