தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரே ஏவுதளத்தில் இருந்து அடுத்தடுத்து 2 ராக்கெட்டுக்கள் விண்ணில் பாய்ந்தது; ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் புதிய சாதனை

ஒரே ஏவுதளத்தில் இருந்து அடுத்தடுத்து 2 ராக்கெட்டுக்கள் விண்ணில் பாய்ந்தது; ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் புதிய சாதனை

ஒரே ஏவுதளத்தில் இருந்து அடுத்தடுத்து 2 ராக்கெட்டுக்கள் விண்ணில் பாய்ந்தது; ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் புதிய சாதனை


UPDATED : நவ 24, 2026 11:36 AM

ADDED : நவ 24, 2026 11:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 11:36 AM ADDED : நவ 24, 2026 11:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்:
அமெரிக்காவின் ஒரே ஏவுதளத்திலிருந்து 2 ராக்கெட்டுகளை ஏவி ஸ்பேஸ்எக்ஸ், சாதனை படைத்தது.

குறுகிய நேர இடைவெளியில் இரு Falcon 9 ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்பட்டன. 32 மணி நேரம், 3 நிமிடங்கள் மற்றும் 21 வினாடிகள் இடைவெளியில் இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு புளோரிடாவில் உள்ள ஏவுதளம் 40ல் 45 மணி நேர இடைவெளியில் இரண்டு ராக்கெட்டுகளை ஏவியதே உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் முறியடித்துள்ளது. அடுத்த இலக்கு, 24 மணி நேரத்தில் முடிப்பது என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிகோ டோன்ட்சேவ் தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது 15வது ஸ்டார்ஷிப் ராக்கெட்டை விண்ணில் ஏவியது. வரலாற்றில் முதல் முறையாக, விண்ணில் இருந்து திரும்பி வந்த ஸ்டார்ஷிப் விண்கலத்தை ஏவுதளத்தில் இருந்த ராட்சத இயந்திரக் கரங்கள் மூலம் பத்திரமாகப் பிடித்து சாதனை படைத்தது. தற்போது மீண்டும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us