ஹிந்து வித்யாலயா மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வில் சாதனை
ஹிந்து வித்யாலயா மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வில் சாதனை
UPDATED : மே 13, 2026 06:29 PM
ADDED : மே 13, 2026 06:30 PM
சென்னை:
ஹிந்து வித்யாலயா பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளனர்.
ஹிந்து வித்யாலயா பள்ளிகளை, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா அமைப்பு நடத்தி வருகிறது. கல்வியுடன், மாணவர்களின் ஒழுக்கம், பண்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. யோகா, தியானம் மற்றும் ஸ்லோகங்கள் கற்பிக்கப்படுவது, இந்த பள்ளிகளின் முக்கிய அம்சமாகும்.
நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், இந்த அமைப்பின் கீழ் இயங்கும் எட்டு பள்ளியில், 552 மாணவர்கள் தேர்வு எழுதி, அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், ஆதம்பாக்கம், ஜி.கே.ஷெட்டி ஹிந்து வித்யாலயா பள்ளி மாணவர் ஹனுமத் சிந்தாமணி, 595 மதிப்பெண் பெற்று ஹிந்து வித்யாலயா பள்ளிகளில் முதலிடம் பிடித்தார்.
சீதாதேவி கரோடியா ஹிந்து வித்யாலயா பள்ளி மாணவர் தினேஷ்குமார், 589 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், நாகர்கோவில், ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகள் ஹிந்து வித்யாலயா பள்ளி மாணவர் சபரீஷ், 585 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளார்.
மேலும், ஹிந்து வித்யாலயா பள்ளிகளில் படித்த மாணவர்கள் கணினி அறிவியல் - 22 பேர்; கணக்கு பதிவியில் - 4; வணிகக்கணிதம் - 3; சமஸ்கிருதம் - 2; பொருளாதாரம், உயிரியல், கணிதம், வணிகவியல், வேதியியல், பிரஞ்ச் ஆகிய பாடங்கள் தலா ஒருவர் என, 37 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களை விஷ்வ ஹிந்து கேந்திரா அமைப்பின் நிறுவனரும் தாளாளருமான வேதாந்தம், துணைத் தலைவர் ரவீந்திரநாத், பொதுச் செயலர்கள் கிரிஜா சேஷாத்ரி, கிருஷ்ணன், பொருளாளர் சசிக்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
