தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெயிலை பாஸாக்கி பிராடு பிளஸ் 2வில் சிக்கிய மாணவர்

பெயிலை பாஸாக்கி பிராடு பிளஸ் 2வில் சிக்கிய மாணவர்

பெயிலை பாஸாக்கி பிராடு பிளஸ் 2வில் சிக்கிய மாணவர்


UPDATED : ஜூலை 06, 2021 12:00 AM

ADDED : ஜூலை 06, 2021 07:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2021 12:00 AM ADDED : ஜூலை 06, 2021 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:
பத்தாம் வகுப்பில் பெயிலான மாணவர் மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்து, அரசு பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 முடித்தார். அவருக்கு பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிட, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை ஆய்வு செய்தபோது, மோசடி அம்பலமானது.
சேலம் மாவட்டம், இடைப்பாடி, வெள்ளார்நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர், 2018 - 2019 கல்வியாண்டில், இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். தேர்வு முடிவில், ஆங்கில பாடத்தில் 31 மதிப்பெண் எடுத்து தோல்வி அடைந்தார்.
ஆனால், மதிப்பெண் சான்றிதழில் 31 என்பதை 35 ஆகவும், &'பெயில்&' எனும் &'F&' என்பதை, &'பாஸ்&' என்பதற்கான &'P&' எனவும் திருத்தம் செய்து, அவர் படித்த அதே பள்ளியில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளாக பிளஸ் 1, பிளஸ் 2 படித்து வந்தார். ஊரடங்கால் பிளஸ் 2 தேர்வு, நடப்பு கல்வியாண்டில் நடக்கவில்லை.
பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிட, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை கடந்த வாரம் ஆசிரியர்கள் ஆய்வு செய்தனர். அதில், மாணவர் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றில் திருத்தம் செய்தது தெரிந்தது. இது குறித்து, மாணவரிடம் விசாரணை நடந்தது. நேற்று பள்ளியில், இடைப்பாடி மாவட்ட கல்வி அலுவலர் விஜயா விசாரித்தார். பள்ளியில் சேரும்போது மாணவர் கொடுத்த மதிப்பெண் சான்றிதழை ஆய்வு செய்தார். தலைமை ஆசிரியர் கீதாராணி, மற்ற ஆசிரியர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us