sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்தினால் 2 ஆண்டு சிறை

குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்தினால் 2 ஆண்டு சிறை

குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்தினால் 2 ஆண்டு சிறை


UPDATED : மே 06, 2026 02:02 PM

ADDED : மே 06, 2026 02:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2026 02:02 PM ADDED : மே 06, 2026 02:08 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி:
குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால், 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை தொழிலாளர் ஆணையர் உத்தரவின் படி, தர்மபுரி தொழிலாளர் துணை ஆய்வாளர் தலைமையில், முத்திரை ஆய்வாளர், முதல் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் அரூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர், போலீார், சைல்டு ஹெல்ப்லைன் ஆகியோர் கடந்த ஏப்., 28ம் தேதி தர்மபுரி பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள பகுதிகள் ஏப்., 29ம் தேதி அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களை கண்டறியும் பொருட்டு கடைகள், உணவு நிறுவனங்கள், சாலையோர விற்பனை நிலையங்கள், மெக்கானிக் ஷாப், பழைய பொருட்கள் வாங்கும் கடைகள், சில்லறை விற்பனை நிலையங்கள், இன்ஜினியரிங் ஒர்க்ஸ் மற்றும் சிக்கன் கடை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், தர்மபுரியில், 11 தொழில் நிறுவனங்கள், அரூரில், ஏழு தொழில் நிறுவனங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். இதில், முரண்பாடுகள் ஏதும் கண்டறியப்படவில்லை. கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில், 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும் என நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், குழந்தை தொழிலாளர் பணிபுரிவது கண்டறியப்பட்டால், 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20,000 ரூபாய் அபராத தொகை விதிக்கப்படும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us