கடலுார் அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
கடலுார் அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
UPDATED : ஜூன் 21, 2026 01:15 PM
ADDED : ஜூன் 21, 2026 01:16 PM
கடலுார்:
கடலுார் அரசு பெரியார் கல்லுாரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை துவங்குகிறது.
கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் செய்திக்குறிப்பு:
கடலுார் அரசு பெரியார் கல்லுாரியில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. முதற்கட்ட மாணவர் சேர்க்கையில் மொத்தம் உள்ள 1375 இடங்களில் 594 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு நாளை 22ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடக்கிறது.
நாளை நடக்கும் கலந்தாய்வு 229ல் இருந்து 220 வரை மதிப்பெண் பெற்று (தமிழ் மற்றும் ஆங்கிலம் நீங்கலாக, மற்ற பிற நான்கு பாடங்களில் 400 மதிப்பெண்ணிற்கு) இணையதளத்தில் பதிவு செய்த மாணவ, மாணவிகளுக்கு நடக்கிறது.
அன்றைய தினம் பி.ஏ., (தமிழ்), பி.ஏ., (ஆங்கிலம்), பாடப்பிரிவில் தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தில் 49ல் இருந்து 35 வரை மதிப்பெண் பெற்று இணையதளத்தில் அந்த துறையை பதிவு செய்த மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை நடக்கிறது.
முதல் கலந்தாய்வில் பங்கேற்க இயலாத மாணவர்கள் நாளை துவங்கும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். குறிப்பாக, அவர்கள் விண்ணப்பித்த பாடப்பிரிவில் இடம் இருந்தால் மட்டும் வாய்ப்பு வழங்கப்படும். கலந்தாய்வுக்கு காலை 9:30 மணி முதல், 10:30 மணிக்குள் வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
