sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி., மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி சாதனை

சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி., மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி சாதனை

சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி., மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி சாதனை


UPDATED : மே 09, 2026 05:29 PM

ADDED : மே 09, 2026 05:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2026 05:29 PM ADDED : மே 09, 2026 05:30 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை:
உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி., மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளது.

இப்பள்ளியில் படித்த மாணவி மணிஷா, 581 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி கோடீஸ்வரி, 561 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடமும், மாணவன் பிரதீப்ராஜ், 547 மதிப்பெண்கள் பெற்று 3 இடம் பிடித்துள்ளனர். 500 மதிப்பெண்களுக்கு மேல் 23 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

இப்பள்ளியில் தேர்வு எழுதிய 112 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, நுாறு சதவீத தேர்ச்சி சாதனை படைத்துள்ளனர். சாரதா வித்யாலயா கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் அன்புமணி, இந்திரா, சாந்தி, விஜயா, அருள்மோகன், தட்சணாமூர்த்தி, தமிழரசி, தமிழ்ச்செல்வி, மஞ்சுளா, மனோகரன் ஆகியோர் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர்.

பள்ளி முதல்வர் திருவேங்கடம் மற்றும் ஆசிரியர்கள் ஜெய்கணேஷ், மணிகண்டன், நடராஜன், ராஜா, கோமதி, கோவிந்தராஜ், மணிவேல், ராஜ்குமார், செந்தில் வேலன், மணிகண்டன், சக்திவேல் ஆகியோர் மாணவர்களை பாராட்டி வாழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us