தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொள்ளாச்சி கல்வி மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 96.17% தேர்ச்சி

பொள்ளாச்சி கல்வி மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 96.17% தேர்ச்சி

பொள்ளாச்சி கல்வி மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 96.17% தேர்ச்சி


UPDATED : மே 09, 2026 05:17 PM

ADDED : மே 09, 2026 05:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 09, 2026 05:17 PM ADDED : மே 09, 2026 05:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, சுல்தான்பேட்டை, மதுக்கரை உள்ளிட்ட ஏழு ஒன்றியங்களில் மொத்தம், 97 பள்ளிகள் உள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம், 36 மையங்களில் நடைபெற்றன. தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்தது. இந்நிலையில், நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதில், பிளஸ் 2 பொதுத்தேர்வை, மாணவர்கள் - 3,397, மாணவியர் - 4,180 என மொத்தம், 7,577 பேர் தேர்வு எழுதினர். அதில், மாணவர்கள், 3,237 (95.29 சதவீதம்), மாணவியர், 4,050 (96.89 சதவீதம்) என மொத்தம், 7,287 பேர் தேர்ச்சி பெற்றனர். கல்வி மாவட்டமானது, 96.17 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

அதிகாரிகள் கூறுகையில், 'கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது. படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டது. வரும் கல்வியாண்டில், கல்வி மாவட்டம், 100 சதவீதம் தேர்ச்சி பெற முயற்சிகள் எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us