தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய நல்லாசிரியர் விருது பெற 20க்குள் விண்ணப்பிக்கணும்

தேசிய நல்லாசிரியர் விருது பெற 20க்குள் விண்ணப்பிக்கணும்

தேசிய நல்லாசிரியர் விருது பெற 20க்குள் விண்ணப்பிக்கணும்


UPDATED : ஜூன் 10, 2021 12:00 AM

ADDED : ஜூன் 10, 2021 03:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2021 12:00 AM ADDED : ஜூன் 10, 2021 03:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்குமாறு, ஆசிரியர்களுக்கு தெரிவிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சார்பில், கல்வி, சமூக மேம்பாட்டிற்கு உழைக்கும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதற்கு, மத்திய அரசின் இணையதளத்தில் (http:/nationalawardstoteachers.education.gov.in) வரும் 20ம் தேதிக்குள், ஆசிரியர்களே நேரடியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும், மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் மட்டுமே, இவ்விருதுக்கு விண்ணப்பிக்க முடியும். ஓய்வு பெற்றவர்கள், அலுவலக பணியில் ஈடுபடுவோர், விண்ணப்பிக்க கூடாது.
கடந்த கல்வியாண்டில், குறைந்தபட்சம் நான்கு மாதங்களாவது பணியாற்றி இருப்பவர்கள், விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us