இனிதே நிறைவடைந்தது பள்ளி வழிகாட்டி 2025; திரண்டு வந்த பெற்றோருக்கு பள்ளி நிர்வாகிகள் விளக்கம்
இனிதே நிறைவடைந்தது பள்ளி வழிகாட்டி 2025; திரண்டு வந்த பெற்றோருக்கு பள்ளி நிர்வாகிகள் விளக்கம்
UPDATED : பிப் 17, 2025 12:00 AM
ADDED : பிப் 17, 2025 08:59 AM

கோவை:
தினமலர் நாளிதழ் நடத்திய, பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சியில், ஏராளமானவர்கள் பங்கேற்று தங்களது குழந்தைகளுக்கான சிறந்த பள்ளி குறித்து கேட்டறிந்தனர்.
தினமலர் நாளிதழ், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் சார்பில், அவிநாசி ரோடு சுகுணா திருமண மண்டபத்தில், பள்ளி வழிகாட்டி 2025 இரு தினங்களாக நடந்தது; நேற்று நிறைவடைந்தது.
25 பள்ளிகளின் அரங்குகள் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு பள்ளியின் சிறப்பு அம்சங்களும், அப்பள்ளியின் நிர்வாகிகளால் எடுத்துரைக்கப்பட்டன. பெற்றோர் விபரங்களை கேட்டறிந்தனர்.
நிகழ்ச்சியை, நேஷனல் மாடல் பள்ளி இணைந்து வழங்கியது. இணை ஸ்பான்சர்களாக அத்வைத் அகாடமி, பிரிட்ஜ்வுட்ஸ் சர்வதேச பள்ளி, மான்செஸ்டர் சர்வதேச பள்ளிகள் செயல்பட்டன. மாலை வரை நடந்த நிகழ்ச்சியில், ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் வந்து, தகவல்களை பெற்று திருப்தியுடன் சென்றனர்.
பள்ளிகளின் சிறப்புகள்
ரத்தினம் சர்வதேச பப்ளிக் பள்ளி தாளாளர் சீமா செந்தில் கூறுகையில், எங்கள் பள்ளியில், செயல்முறை கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ரோபோட்டிக் வகுப்புகள் நர்சரி முதல் நடத்தப்படுகின்றன என்றார்.
மிடாஸ் டச் ஸ்கூல் ஆப் எக்சலன்ஸ் முதல்வர் சர்மிளா கூறுகையில்,எங்கள் பள்ளியில், வேதிக் முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நமது பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக, பாடத்திட்டங்கள் உள்ளன, என்றார்.
தாமரை வேர்ல்டு பள்ளி ஆசிரியர் தேன்மொழி கூறுகையில், எங்கள் பள்ளியில் மாணவர்கள் கற்றலை உற்சாகத்துடன் கற்க வேண்டும் என்ற நோக்கில், ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவமான கல்வி போதிக்கப்படுகிறது என்றார்.
வடவள்ளி நாராயணா இ-டெக்னோ பள்ளி உதவி பொது மேலாளர் சதீஸ் கூறுகையில், எங்கள் பள்ளியில் கல்விக்கு இணையாக, விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது, என்றார்.
ஓலேஜி வேலம்மாள் போதி கேம்பஸ் ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா கூறுகையில், எங்கள் பள்ளியில், கல்வி தரம், தனித்துவமான கவனிப்பு, பாதுகாப்பு இம்மூன்றின் அடிப்படையில் தான் கல்வி வழங்கப்படுகிறது, என்றார்.