தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தவர்கள் 22ம் தேதிக்குள் சேர அறிவுறுத்தல்

மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தவர்கள் 22ம் தேதிக்குள் சேர அறிவுறுத்தல்

மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தவர்கள் 22ம் தேதிக்குள் சேர அறிவுறுத்தல்


UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM

ADDED : ஜூலை 19, 2014 11:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2014 12:00 AM ADDED : ஜூலை 19, 2014 11:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்கள் வரும் 22ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மருத்துவ படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் கடந்த ஜூன் மாதம் நடந்தது. இதில் 1003 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். இரண்டாம் கட்ட கவுன்சிலில் கடந்த 6ம் தேதி துவங்கி நடந்தது. இதில் 3 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இரண்டு கட்ட கவுன்சிலிங்கில் சீட்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை உறுதி கடிதம் தரப்படவில்லை. கையெழுத்து மட்டும் பெறப்பட்டது.

அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுமதி கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டதால் மாணவர் சேர்க்கையும் தள்ளிப்போனது. இந்நிலையில் அரசு மருத்துவ கல்லூரிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் தற்போது அனுமதி வழங்கியுள்ளதால் மாணவர் சேர்க்கையை சென்டாக் நிர்வாகம் துரிதப்படுத்தி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவ கவுன்சிலிங்கில் சீட்களை தேர்வு செய்த மாணவர்கள் வரும் 21ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என அலாட்மெண்ட் கடிதத்தை அனுப்பி வைக்கப்பட்டது. மாணவர்களின் கோரிக்கை ஏற்று மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை சென்டாக் நிர்வாகம் தற்போது நீடித்துள்ளது.

சென்டாக் அதிகாரிகள் கூறும்போது "சேர்க்கை ஆணை பெற்றவர்கள் அவர்களுக்குரிய கல்லூரியில் சேர்ந்து கொள்வதற்கான கால அவகாசம் வரும் 22ம் தேதி மாலை 5௦௦ மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை கடிதம் கிடைக்காவிட்டாலும் இடம் கிடைத்த கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம்" என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us