தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துளிர் திறனறிதல் தேர்வு : 2,230 மாணவர்கள் பங்கேற்பு

துளிர் திறனறிதல் தேர்வு : 2,230 மாணவர்கள் பங்கேற்பு

துளிர் திறனறிதல் தேர்வு : 2,230 மாணவர்கள் பங்கேற்பு


UPDATED : டிச 02, 2025 07:20 AM

ADDED : டிச 02, 2025 07:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2025 07:20 AM ADDED : டிச 02, 2025 07:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான துளிர் திறனறிதல் தேர்வில் 2,230 மாணவர்கள் பங்கேற்றனர்.

அறிவியல் இயக்கம் சார்பில், மாணவர்களிடம் அறிவியல் சிந்தனை, அறிவியல் மனப்பான்மை மற்றும் பொது அறிவை வளர்க்கும் வகையிலான துளிர் திறனறிதல் தேர்வு, ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

அறிவியல் மற்றும் பொது அறிவு தொடர்பான வினாக்கள் இத்தேர்வில் இடம்பெறும். இத்தேர் வு 2 மணி நேரம் நடைபெறும். அதன்படி, இந்தாண்டு, விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த தேர்வை 4ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 2,230 மாணவர்கள் எழுதினர். 12 ஒன்றியங்களில் 72 மையங்களில் இத்தேர்வு நடந்தது.

தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், மாநில அளவி லான தேர்வில் பங்கேற்றமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடக்க நிலையில் குழந்தைகள் துளிர் இதழும், உயர்தொடக்க நிலை மாணவர்களுக்கு விஞ்ஞான துளிர் இதழும் வழங்கப்பட்டது.

தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெறும் மாணவர்கள், மாநில அளவிலான அறிவியல் சுற்று லாவிற்கு அழைத்துச் செல்லப்படுவர். அறிவியல் அறிஞர்களை சந்திப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.

மாவட்ட ஒருங்கிணைப் பாளர் சுகதேவ், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், இளங் கோவன், சங்கர நாராயணன், மாவட்ட செயலாளர் பாலமுருகன், தலைவர் சேகர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us