இன்ஜி., முதலாமாண்டு வகுப்பு வரும் 23ம் தேதி துவக்கம்
இன்ஜி., முதலாமாண்டு வகுப்பு வரும் 23ம் தேதி துவக்கம்
UPDATED : நவ 04, 2020 12:00 AM
ADDED : நவ 04, 2020 09:24 AM
தமிழகத்தில் இன்ஜி., படிப்புகளுக்கான பொது கவுன்சிலிங், நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டு, கடந்த, 28ம் தேதி நிறைவடைந்தது.இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தளர்வுகளை அறிவித்ததுடன், கல்லுாரிகள் வரும், 16ம் தேதி முதல் செயல்பட அனுமதியளித்தது.
இதையடுத்து, இன்ஜி., கல்லுாரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும், 23ம் தேதி முதல் துவக்கப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
தன்னாட்சி அதிகாரம் பெறாத, இணைப்பு கல்லுாரிகளில், பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., படிப்புகளுக்கான முதல் செமஸ்டர் வகுப்புகள் வரும், 23ம் தேதி துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செமஸ்டரின் கடைசி வேலை நாள், பிப்., 24ம் தேதி என்றும், அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் செமஸ்டர் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, அடுத்தாண்டு பிப்., 26ம் தேதியும், செமஸ்டர் தேர்வு மார்ச் 8ம் தேதியும் நடக்கும் என, அண்ணா பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
