தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை மருத்துவ படிப்பு ஆக., 24 முதல் விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவ படிப்பு ஆக., 24 முதல் விண்ணப்பிக்கலாம்

கால்நடை மருத்துவ படிப்பு ஆக., 24 முதல் விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஆக 22, 2020 12:00 AM

ADDED : ஆக 22, 2020 07:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2020 12:00 AM ADDED : ஆக 22, 2020 07:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்கலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய நகரங்களில், கால்நடை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு எனப்படும், பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்., பட்ட படிப்புகள்; உணவு கோழியின மற்றும் பால்வள தொழில்நுட்பத்தில், பி.டெக்., படிப்புகள் உள்ளன.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 2020 -21ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், வரும், 24ம் தேதி காலை, 10:00 மணி முதல், www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், இணையதளம் வாயிலாகவே, செப்., 28 மாலை, 6:00 மணிக்குள் பதிவேற்ற வேண்டும். அயல்நாடுவாழ் இந்தியர், அயல்நாடுவாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டின மாணவர்களும், இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அக்., 23 மாலை, 6:00 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். பிற வடிவ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகவல் தொகுப்பேடு, சேர்க்கை தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விபரங்கள் இணையதளத்தில் உள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us