தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் கல்வி : 27ம் தேதி ஆசிரியர்களுக்கு பயிற்சி

சமச்சீர் கல்வி : 27ம் தேதி ஆசிரியர்களுக்கு பயிற்சி

சமச்சீர் கல்வி : 27ம் தேதி ஆசிரியர்களுக்கு பயிற்சி


UPDATED : ஆக 20, 2011 12:00 AM

ADDED : ஆக 20, 2011 12:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2011 12:00 AM ADDED : ஆக 20, 2011 12:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சமச்சீர் பாட திட்ட கல்வி முறைகள் குறித்து குறு வள மைய அளவில் 27ம் தேதி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 4ம் வகுப்பு வரை செயல் வழி கற்றல் முறையும், 5ம் வகுப்பில் எளிய படைப்பாற்றல் கல்வி முறையும், 6-8ம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறையும் கற்றல், கற்பித்தல் முறைகளாக தொடரும் என மாநில திட்ட இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

சமச்சீர் கல்வி பாட திட்டத்தில் இந்த கல்வி முறைகளில் கற்பிக்க ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் வகையில் குறு வள மையத்தில் பணி மனை நடத்தப்படுகிறது. இப்பணிமனை வரும் 27ம் தேதி அனைத்து குறு வள மைய அளவில் நடக்கிறது.

வரும் 25ம் தேதி தேர்வு செய்யப்பட்ட கருத்தாளர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது.மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பகவதி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us