தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுப் போட்டி தேர்வுகள்: வரும் 27ல் இலவச பயிற்சி

அரசுப் போட்டி தேர்வுகள்: வரும் 27ல் இலவச பயிற்சி

அரசுப் போட்டி தேர்வுகள்: வரும் 27ல் இலவச பயிற்சி


UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM

ADDED : ஜூலை 24, 2014 02:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2014 12:00 AM ADDED : ஜூலை 24, 2014 02:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: "மத்திய, மாநில அரசு பணிக்கான ஆள்சேர்ப்பு வாரியங்கள் நடத்தும் போட்டித் தேர்வுக்கு வரும் 27ம் தேதி முதல் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும்" என தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: யு.பி.எஸ்.ஸி., டி.என்.பி.எஸ்.ஸி., எஸ்.எஸ். ஸி.,  ஆர்.ஆர்.பி. போன்ற மத்திய, மாநில அரசுப்பணிக்கான ஆள் சேர்ப்பு வாரியங்கள் போட்டி தேர்வுகள் நடத்துக்கின்றனர். அதில் பணி வாய்ப்பு பெற விரும்பும் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்களுக்கு உதவும் வகையில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற திட்டம் செயல்படுகிறது.

இத்திட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், நூலக வசதி ஏற்படுத்தப்பட்டதுடன் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், தன்னம்பிக்கை வளர்த்தல், மாதிரி தேர்வுகள் போன்றவை நடத்தப்படுகிறது.

போட்டித் தேர்வு மூலமும் மற்றும் தனியார் துறைகளில் பணி வாய்ப்பு பெறுவதற்கு, ஆங்கில புலமை அவசியம் என்பதை கருத்தில் கொண்டு தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக ஆங்கில அறிவினை வளர்த்துக் கொள்ள உதவும் வகையிலும், இலவச பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கில பேராசிரியராக பணியாற்றிய அனுபவமிக்க பேராசிரியர் பழனி அரங்கசாமி பயிற்சி அளிக்க உள்ளார். இந்த பயிற்சி வரும் 27ம் தேதி தொடங்கி ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் காலை 10 மணி முதல் 1 மணி வரை தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கும்.

இந்த பயிற்சி சேர 9443526510 என்ற மொபைல் ஃபோனில் எஸ்.எம்.எஸ். அனுப்பியும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் முன்பதிவு செய்யாதவர்கள் வரும் 27ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us