தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு

இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு

இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டம்; அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் விருது வழங்கி கவுரவிப்பு


UPDATED : மே 23, 2026 01:55 PM

ADDED : மே 23, 2026 01:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2026 01:55 PM ADDED : மே 23, 2026 01:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

2026ம் ஆண்டிற்கான கோடார்ட் விண்வெளி ஆய்வு விருதை இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டத்திற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் வழங்கியது. அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் வினய் குவாத்ரா இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

சந்திரயான் - 3 என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட விண்கலத் திட்டமாகும். நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை மெதுவாகவும் பாதுகாப்பாகவும் தரையிறக்கும் திறனை நிரூபித்ததன் மூலம், உலக அளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்தது.

இந்தியாவின் சந்திரயான் - 3 திட்டத்திற்கு, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் 2026ம் ஆண்டிற்கான கோடார்ட் விண்வெளி ஆய்வு விருதை வழங்கி கவுரவித்தது. அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் வினய் குவாத்ரா இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

பிறகு இந்தியத் தூதர் வினய் குவாத்ரா பேசிய போது, பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையையும், விண்வெளி ஆய்வு, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் ஆகியவற்றிற்கான இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கையை எடுத்துரைத்தார்.

அவர், விண்வெளி ஆய்வில் இந்தியா மற்றும் அமெரிக்கா தொழில்துறைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தவும் அழைப்பு விடுத்தார். கோடார்ட் விண்வெளி ஆய்வு விருது என்பது விண்வெளித் துறையில் மிகச் சிறப்பான சாதனைகளுக்காக அமெரிக்க விண்வெளி நிறுவனம் வழங்கும் மிக உயரிய விருதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us