மாநில அளவிலான ஓவிய போட்டி: 3ம் இடத்தில் காஞ்சி பள்ளி மாணவி
மாநில அளவிலான ஓவிய போட்டி: 3ம் இடத்தில் காஞ்சி பள்ளி மாணவி
UPDATED : நவ 04, 2026 03:30 PM
ADDED : நவ 04, 2026 03:31 PM
காஞ்சிபுரம்:
மதுரையில் நடந்த மாநில அளவிலான கலை திருவிழா ஓவிய போட்டியில், காஞ்சிபுரம் அடுத்த கரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவி சு.யாசிகா மூன்றாமிடம் பெற்றுள்ளார்.
பள்ளி கல்வித் துறை சார்பில் காஞ்சிபுரத்தில் நடந்த தொடக்கப் பள்ளி மாணவ மாணவியருக்கான மாவட்ட அளவிலான கலை திருவிழா ஓவிய போட்டியில், காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் ஒன்றியம், கரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நான்காம் வகுப்பு மாணவி யாசிகா, 8, மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றார்.
இதன் மூலம் மாநில அளவிலான ஓவிய போட்டியில் பங்கேற்க சு.யாசிகா தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, மதுரையில் கடந்த மாதம் 28ம் தேதி தொடக்கப் பள்ளி மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான கலை திருவிழா ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, நேற்று முன்தினம் போட்டி முடிவு வெளியானது. இதில், யாசிகா மூன்றாவது பரிசு பெற்றார்.
மாநில அளவிலான கலை திருவிழா ஓவிய போட்டியில் மூன்றாவது பரிசு பெற்ற மாணவி யாசிகாவை, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள், மாணவ மாணவியர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
