தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில சீனியாரிட்டியில் ஆசிரியர் நியமனம்: 3 மாவட்டங்களுக்கு யோகம்

மாநில சீனியாரிட்டியில் ஆசிரியர் நியமனம்: 3 மாவட்டங்களுக்கு யோகம்

மாநில சீனியாரிட்டியில் ஆசிரியர் நியமனம்: 3 மாவட்டங்களுக்கு யோகம்


UPDATED : டிச 08, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதனால், 5,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கே கிடைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு ஆரம்பப் பள்ளிகளில் நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்கள், இதுவரை மாவட்ட சீனியாரிட்டி அடிப்படையில் அந்தந்த மாவட்டங்களில் நியமிக்கப்பட்டு வந்தனர். அந்தந்த மாவட்டங்களில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப, அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்துவந்தன. ஆனால், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதே நேரத்தில், இந்த மாவட்டங்களில் ஏற்படும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறைவு. 1985ம் ஆண்டில் ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களுக்குக் கூட இன்னும் வேலை கிடைக்காத நிலை, அந்த மாவட்டங்களில் மட்டும் இருக்கிறது. குறைந்த எண்ணிக்கையில் காலிப் பணியிடம் ஏற்படும் போது, ஒரு சிலர் மட்டும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுவந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. மாநில சீனியாரிட்டி அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு ஒப்புக்கொண்டது. இதனடிப்படையில், 2007-08 மற்றும் நடப்பு கல்வியாண்டில் காலியாக உள்ள 5,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், மாநில சீனியாரிட்டி அடிப்படையில் விரைவில் நியமனம் செய்வதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது, மாநில சீனியாரிட்டி பட்டியலை தயாரிக்கும் பணியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் ஈடுபட்டுள்ளன. ஒரு பணியிடத்திற்கு ஐந்து பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அந்த பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். அதன் பின், ஒரு பணியிடத்திற்கு இரண்டு பேர் வீதம் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்தப் பட்டியலை இறுதி செய்து, தொடக்க கல்வித் துறையிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் ஒப்படைக்கும். பின், ஆசிரியர் பணி நியமனங்கள் நடைபெறும்.
இந்தப் பணிகள் அனைத்தும் முடிவதற்கு மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகலாம். மாநில சீனியாரிட்டி என்று பார்க்கும் போது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே முழுக்க முழுக்க பட்டியலில் இடம்பிடிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
எனவே, தற்போது நியமிக்கப்பட உள்ள 5,000 பணியிடங்களும் இந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கே கிடைக்கும். தற்போது நியமிக்கப்படும் இடங்கள் மட்டுமில்லாமல், வரக்கூடிய ஆண்டுகளிலும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் முழுவதும் தென் மாவட்டங்களுக்கே கிடைக்கக் கூடிய நிலையும் இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us