சென்டாக் இறுதி கட்ட கவுன்சிலிங் 3 நாட்கள் நடக்கிறது
சென்டாக் இறுதி கட்ட கவுன்சிலிங் 3 நாட்கள் நடக்கிறது
UPDATED : நவ 06, 2023 12:00 AM
ADDED : நவ 06, 2023 10:30 AM
புதுச்சேரி:
நீட் மதிப்பெண் அல்லாத தொழிற்படிப்புகள், கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கான இறுதி கட்ட கவுன்சிலிங் இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளான பி.எஸ்சி., அக்ரி, தோட்டக்கலை, பி.எஸ்சி., நர்சிங், பி.பி.டி., பி.எஸ்சி., எம்.எல்.டி., டி.பார்ம், கலை அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு இறுதி கட்ட கவுன்சிலிங்கை, நேற்று 5ம் தேதி தொடங்கி நாளை 7ம் தேதி வரை நடத்த சென்டாக் திட்டமிட்டுள்ளது. இன்று 6ம் தேதி காலை 9.30 மணிக்கு பி.எஸ்சி., அக்ரி, தோட்டக்கலை படிப்பிற்கும், 10.30 மணிக்கு பி.ஏ., எல்.எல்.பி., 11.30 மணிக்கு பி.பார்ம், மதியம் 1.30 மணிக்கு உயிரியல் சார்ந்த டிப்ளமோ படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடக்கின்றது. 7ம் தேதி காலை 9.30 மணிக்கு கலை, அறிவியல் படிப்புக்கு கவுன்சிலிங் நடக்கின்றது. இதில் புதுச்சேரி,பிற மாநில மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
