தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி 30 வரை விண்ணப்பிக்கலாம்

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி 30 வரை விண்ணப்பிக்கலாம்

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி 30 வரை விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூன் 24, 2023 12:00 AM

ADDED : ஜூன் 24, 2023 05:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 24, 2023 12:00 AM ADDED : ஜூன் 24, 2023 05:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஆதிதிராவிடர் நலத்துறை வழியே செயல்படுத்தப்படும், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற வரும் 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கான இணையதளம், 2022 - 23ம் ஆண்டுக்கான மாணவர்களின் விண்ணப்பங்களைப் பெறுவதற்காக, கடந்த ஜன.,30ல் திறக்கப்பட்டது. மே 31ல் முடிவுற்றது. மொத்தம் 4.10 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. எனினும், கல்வி உதவித்தொகை பெற, விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இணையதளம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க தவறியவர்கள், வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இந்த கல்வி ஆண்டு முதல், முதன்முறையாக ஆதார் எண், மொபைல் எண், இணையத்தில் பெறப்பட்ட ஜாதிச்சான்று, வருமானச் சான்று, ஆதாருடன் இணைக்கப்பட்ட, வங்கி சேமிப்பு கணக்கு எண் ஆகியவை, இணையம் வழியில் சரி பார்க்கப்படும். அதன்பின் மாணவர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு, கல்வி உதவித் தொகை சென்றடையும் வகையில், இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us