UPDATED : செப் 16, 2025 12:00 AM
ADDED : செப் 16, 2025 08:29 AM
வால்பாறை:
அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில், வரும் 30ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில், அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில், பிட்டர், எலக்ட்ரீசியன், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல்ஸ் மெக்கட்ரானிக்ஸ் ஆகிய பாடப்பிரிவின் கீழ், மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த கல்வியாண்டில், கடந்த ஜூன் மாதம் மாணவர்கள் சேர்க்கை துவங்கியது. மொத்தம் உள்ள 104 சீட்களுக்கு நேற்று வரை, 61 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.இதனையடுத்து மாணவர்கள் சேர்க்கையை வரும், 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொழில் பயிற்சி நிலைய முதல்வர் நடராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தொழில் பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், அரசின் சார்பில் இலவச பஸ் பாஸ், சைக்கிள், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொழில் பயிற்சில் சேர எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
உயர்கல்வி படிக்க முடியாத மாணவர்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயன்பெறலாம். மாணவர்கள் வசதிக்காக, இம்மாதம், 30ம் தேதி வரை நேரடி அட்மிஷன் நடக்கிறது. கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

