வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம்: 3.5 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம்: 3.5 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
UPDATED : ஜூலை 05, 2025 12:00 AM
ADDED : ஜூலை 05, 2025 08:57 AM

சென்னை:
மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம், 3.5 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் என்று மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த திட்டத்திற்கு ரூ.99,446 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், உற்பத்தித் துறையிலும் ஆராய்ச்சி வளர்ச்சியிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
2025 ஆகஸ்ட் 1 முதல் 2027 ஜூலை 31 வரை உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள் இந்த திட்டத்தின் கீழ் அடங்கும். 15,000 ரூபாய் வரையிலான ஊக்கத்தொகை இரு தவணைகளாக நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
புதிய ஊழியர்களுக்கும் வேலை வழங்கும் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் இந்த திட்டம், அமைப்புசாரா தொழிலாளர்களை அமைப்பு சார்ந்த முறைக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் செயல்படுகிறது.
ஊதியம் ஒரு லட்சம் ரூபாய் வரை உள்ள ஊழியர்களுக்கு, வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.3,000 வரை ஊக்கத்தொகை, உற்பத்தித் துறையில் நான்காவது ஆண்டுவரையும் வழங்கப்படும்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் அருண் குமார் கலந்து கொண்டார்.