தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை பிடித்து 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம் சாதித்தது

பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை பிடித்து 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம் சாதித்தது

பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை பிடித்து 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம் சாதித்தது


UPDATED : நவ 16, 2026 10:36 AM

ADDED : நவ 16, 2026 10:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 10:36 AM ADDED : நவ 16, 2026 10:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆஸ்டின்:
அமெரிக்காவைச் சேர்ந்த 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம் இது வரை, பூமிக்கு திரும்பிய ராக்கெட்டின், 'பூஸ்டர்' பகுதியை மட்டுமே திரும்ப பிடித்து பயன்படுத்திய நிலையில், விண்வெளியில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்திவிட்டு பூமிக்கு திரும்பிய ராக்கெட்டை லாவகமாக பிடித்து நிறுத்திய சாதனையைப் படைத்துள்ளது.

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், விண்வெளிக்கு செலுத்தப்படும் ராக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.

இதன் வாயிலாக விண்வெளி பயணச் செலவு குறைத்து, அடிக்கடி ராக்கெட்டுகளை செலுத்த முடியும் என அந்நிறுவனம் கருதுகிறது. இந்நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட்டான 'ஸ்டார்ஷிப்' விண்வெளிக்கு ஏவப்பட்டது.

இந்த ஸ்டார்ஷிப்பில் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. மேல் பகுதி, செயற்கைக்கோளை நிலைநிறுத்த, மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப பயன்படுகிறது. இரண்டாவது அடிப்பகுதியில் உள்ள 'சூப்பர் ஹெவி' என்ற பெயரில் அழைக்கப்படும் 'பூஸ்டர்'. எரிபொருளுடன் கூடிய இந்த அமைப்பு ஒட்டுமொத்த ராக்கெட்டுக்கு உந்துவிசையை வழங்குகிறது.

'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம் இதற்கு முன், பூமிக்கு திரும்பிய 'பூஸ்டர்' பகுதியை, ஏவுதளத்தில் உள்ள, ராக்கெட்டை அனுப்ப உதவும் இரும்பு துாண்களில் உள்ள கைகள் போன்ற அமைப்பின் மூலம் பத்திரமாக பிடித்துள்ளது.

மேலும், முன்னதாக அனுப்பிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டின், பூஸ்டர் பகுதி கீழே இறங்கும் போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வெடித்து சிதறியது.

அதே நேரத்தில், 26 செயற்கைக்கோள்களுடன் சென்ற ஸ்டார்ஷிப், அவற்றை விண்வெளியில் திட்டமிட்டபடி நிலைநிறுத்தியது. அதைத் தொடர்ந்து, பூமியை 14 முறை சுற்றி வந்து, பூமிக்கு திரும்பியது. டெக்சாசில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி தளத்தில் அந்த ராக்கெட் பத்திரமாக பிடிக்கப்பட்டது. இது விண்வெளி துறையில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us