முதுநிலை மருத்துவ படிப்பு விண்ணப்பிக்க 4 நாள் அவகாசம்
முதுநிலை மருத்துவ படிப்பு விண்ணப்பிக்க 4 நாள் அவகாசம்
UPDATED : ஜூலை 13, 2023 12:00 AM
ADDED : ஜூலை 13, 2023 11:23 AM
சென்னை:
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நான்கு நாட்கள் நீடித்து மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள 4,200 எம்.டி., எம்.எஸ்., என்ற முதுநிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. இதில், 50 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்களுக்கான சேர்க்கையை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் நடத்துகிறது.இதற்கான விண்ணப்ப வினியோகம், https://tnmedicalselection.net, https://tnhealth.tn.gov.in/ என்ற இணையதளங்களில் துவங்கி ஜூலை 14ம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் 17ம் தேதி மாலை 5:00 மணி வரை நீட்டித்து மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் அறிவித்துள்ளது.
