தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரபலமான வர்த்தக பள்ளிகள் இந்தியாவுக்கு 4வது இடம்

பிரபலமான வர்த்தக பள்ளிகள் இந்தியாவுக்கு 4வது இடம்

பிரபலமான வர்த்தக பள்ளிகள் இந்தியாவுக்கு 4வது இடம்


UPDATED : டிச 20, 2010 12:00 AM

ADDED : டிச 20, 2010 01:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2010 12:00 AM ADDED : டிச 20, 2010 01:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மும்பை: சர்வதேச அளவில், வர்த்தக கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் அதிகம் தேர்வு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் வர்த்தக கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வை நடத்தும் அமைப்பு, பட்டதாரி மேலாண்மை சேர்க்கை கவுன்சில். இந்த அமைப்பு சார்பில், வர்த்தக கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள், எந்த நாட்டில் படிக்க விரும்புகின்றனர் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.



இதில், அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 72 சதவீத மாணவர்கள், அமெரிக்காவில் உள்ள வர்த்தக பள்ளிகளில் தான் படிக்க விரும்புகின்றனர். இதற்கு அடுத்தபடியாக, பிரிட்டனில் அதிக அளவில் மாணவர்கள் படிக்க விரும்புகின்றனர். 6 சதவீத மாணவர்கள் இங்கு படிக்க விரும்புகின்றனர். அடுத்ததாக, கனடாவில் 4 சதவீத மாணவர்கள் படிக்க விரும்புகின்றனர்.



ஆச்சரியம் அளிக்கும் வகையில், முதல் பத்து இடங்களில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் 3 சதவீத மாணவர்கள் இந்தியாவில் உள்ள வர்த்தக பள்ளிகளில் படிக்க விரும்புகின்றனர். இந்த பட்டியலில் பிரான்ஸ் ஐந்தாவது இடத்தையும், சீனா ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலுக்கு ஆச்சரியம் அளிக்கும் புதிய வரவாக இஸ்ரேல், ஸ்பெயின் ஆகிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன.



எம்.பி.ஏ., (முழு நேரம்) படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின், முதல் தேர்வு அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களாகத் தான் இருந்தது. தற்போது இந்தியர்களின் இந்த மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களைத் தான் அதிகம் தேர்வு செய்கின்றனர். அதேபோல், இந்திய மாணவர்களை குறிவைத்தே, கனடாவில் உள்ள வர்த்தக பள்ளிகளில் பல சிறப்பு பாடத் திட்டங்கள் துவக்கப்படுகின்றன. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us