பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில் 42வது ஆண்டு விழா
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில் 42வது ஆண்டு விழா
UPDATED : மார் 24, 2026 06:34 PM
ADDED : மார் 24, 2026 06:35 PM
ஈரோடு பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில், 42வது ஆண்டு விழா நடந்தது. ஹெக்சாவேர் நிறுவன ஆரம்ப நிலை பணியாளர் வளர்ச்சி பிரிவு உதவி துணை தலைவர் மற்றும் முதன்மை வழிகாட்டி கிருஷ்ணா பாலகுருநாதன், தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். சென்னை ஒனர்ஜி சேவை நிறுவன மேலாண்மை இயக்குநர் அருண் கே.பாலசுப்ரமணியன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கல்லுாரி முதல்வர் பரமேஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லுாரியில் இறுதியாண்டு முடித்து வெளியேறும் மாணவர், மாணவிகளில், சிறந்த மாணவர் தேர்வு செய்யப்பட்டு, கல்லுாரி சார்பாக ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விளையாட்டில் சிறந்த மாணவர்கள், சிறந்த கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்த மாணவர்கள், துறை வாரியாக சிறந்த ஆசிரியர்களுக்கும், சிறந்த கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்த ஆசிரியர்களுக்கும், விருது வழங்கப்பட்டது.
விழாவில் கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை தலைவர் தேவராஜன், செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் கார்த்திகேயன், கல்லுாரி தாளாளர் கிருஷ்ணன் மற்றும் அறக்கட்டளை பாரம்பரிய பாதுகாவலர்கள், கல்லுாரி முதன்மையர், துறை தலைவர்கள், பேராசிரியர், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
