தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஹார்வர்டு பல்கலைக்கு இந்திய அரசு 4.5 மில்லியன் டாலர் நன்கொடை!

ஹார்வர்டு பல்கலைக்கு இந்திய அரசு 4.5 மில்லியன் டாலர் நன்கொடை!

ஹார்வர்டு பல்கலைக்கு இந்திய அரசு 4.5 மில்லியன் டாலர் நன்கொடை!


UPDATED : டிச 12, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் பெயரில் இந்த பெல்லோஷிப் வழங்கப்படும்.


அமெரிக்காவில் உள்ள பிரபல ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஐவி லீக் இன்ஸ்டிட்யூஷனின் கிராஜுவேட் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் கல்வி நிலையத்தில் உயர்கல்வி படிக்கும் திறமையான இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க இந்த நன்கொடை பயன்படுத்தப்படும்.


இதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ரொனேன் சென், ஹார்வர்டு பல்கலைக்கழகத் தலைவர் டிரா கில்பின் பாஸ்ட் ஆகியோர் கையெழுத்திட்டனர். அப்போது அமர்த்தியா சென்னும் உடன் இருந்தார்.


இந்திய அரசு வழங்கிய நன்கொடை, திறமையான இந்திய மாணவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க உதவியாக இருக்கும். இந்த பெல்லோஷிப் பெறும் மாணவர்கள் உலகிலேயே மிகச் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வர்டில் படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று அமர்த்தியா சென் தெரிவித்தார். இந்த பெல்லோஷிப் வழங்கப்படுவதன் மூலம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள உறவு மேலும் உறுதியாகும் என்றார் ரொனேன்சென்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us