தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு 45 பேர் போட்டி

வேளாண் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு 45 பேர் போட்டி

வேளாண் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு 45 பேர் போட்டி


UPDATED : அக் 17, 2015 12:00 AM

ADDED : அக் 17, 2015 11:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2015 12:00 AM ADDED : அக் 17, 2015 11:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் பதவியை கைப்பற்ற
, 45 பேர் போட்டியிடுகின்றனர்.

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி, ஆக.,26ல் ஓய்வு பெற்றார். தற்போது, புதிய துணைவேந்தர் தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கென மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி வேதநாராயணன் குழு தலைவராகவும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக இயக்குனர் ஐயப்பன், மேலாண் வாரியம் சார்பில் சித்தானந்தம், குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துணைவேந்தர் பதவிக்கு, நேற்று முன்தினம் வரை, 45 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த, 45 பேரில் இருந்து, மூவரை மட்டும் தேர்வு செய்து, தமிழக அரசுக்கு, குழுவினர் அனுப்பி வைப்பர். அந்த மூவரில் ஒருவரை, துணைவேந்தராக அரசு நியமிக்கும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேராசிரியர் ஒருவர் கூறுகையில், இதுவரை மறைமுகமாக நடந்து வந்த துணைவேந்தர் தேர்வு, நடப்பாண்டு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது வரவேற்பை பெற்றுள்ளது. அதனால்தான், அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us