தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி., விண்ணப்ப பதிவு துவக்கம்; 5 ஆண்டு கட் ஆப் வெளியீடு

இன்ஜி., விண்ணப்ப பதிவு துவக்கம்; 5 ஆண்டு கட் ஆப் வெளியீடு

இன்ஜி., விண்ணப்ப பதிவு துவக்கம்; 5 ஆண்டு கட் ஆப் வெளியீடு


UPDATED : மே 04, 2026 04:39 PM

ADDED : மே 04, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 04, 2026 04:39 PM ADDED : மே 04, 2026 04:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில், இன்ஜினியரிங் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது.

அண்ணா பல்கலையின் கீழ், 400க்கும் அதிகமான இன்ஜினியரிங் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இதில், 2.54 லட்சத்துக்கும் அதிகமான, பி.இ., பி.டெக்., பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன.

இதற்கான மாணவர் சேர்க்கையை, உயர்கல்வி துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம், இணையம் வழியே ஆண்டுதோறும் நடத்துகிறது.

அந்த வகையில், 2026 - 27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது.

மாணவர்கள், www.tneaonline.org என்ற இணையதளத்தில், இன்ஜி., படிப்புக்கு, ஜூன் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதள வசதி இல்லாத மாணவ மாணவியர், தமிழகம் முழுதும், 110 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகள், தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குழு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, எமிஸ் எண்; 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்; பிளஸ் 2 தேர்வு பதிவு எண், உட்பட 16 ஆவணங்கள் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.

கடந்த ஆண்டுகளில், இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், தங்கள், 'கட் ஆப்' மதிப்பெண்ணிற்கு, எந்த கல்லுாரியில், எந்த பாடத்திற்கு இடம் கிடைக்கும் என்பதை அறிய, ஐந்து ஆண்டுகளுக்கான, 'கட் ஆப்' மதிப்பெண்கள் தனித்தனியே வெளியிடப்படும்.

ஆனால், நடப்பாண்டு, கடந்த ஐந்து ஆண்டு 'கட் ஆப்' மதிப்பெண்களை மாணவர்கள் ஒப்பிட்டு பார்க்கும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதே போல, ஒவ்வொரு இன்ஜி., பாடப்பிரிவுகளிலும், எவ்வளவு மாணவர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் சேர்ந்துள்ளனர் என்ற விபரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

மேலும் சந்தேகங்களுக்கு, 18004250110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மாணவர் சேர்க்கை அட்டவணை:

விண்ணப்பிக்க கடைசி நாள் - ஜூன் 2.

ஆவணங்களை பதிவு செய்ய கடைசி நாள் - ஜூன் 6.

'ரேண்டம் எண்' எனப்படும் சமவாய்ப்பு எண் வெளியீடு - ஜூன் 5.

சான்றிதழ் சரிபார்ப்பு - ஜூன் 8 முதல் 20 வரை.

தரவரிசை பட்டியல் வெளியீடு - ஜூன் 29.

தரவரிசை குறித்த குறை தீர்ப்பு - ஜூன் 30 முதல் ஜூலை 7.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us