அரசியல் அமைப்பு முகவுரை செப்., 5ல் பள்ளிகளில் வாசிப்பு
அரசியல் அமைப்பு முகவுரை செப்., 5ல் பள்ளிகளில் வாசிப்பு
UPDATED : ஆக 29, 2023 12:00 AM
ADDED : ஆக 29, 2023 01:34 PM
தார்வாட்:
கர்நாடகாவின் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள், இந்திய அரசியல் அமைப்பு சட்ட முகவுரையை வாசிப்பது, செப்டம்பர் 5ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.இது தொடர்பாக தார்வாடில் அவர் கூறியதாவது:
நாட்டு மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழி வகை செய்து கொடுத்துள்ளது. எனவே மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் அரசியல் அமைப்பு சட்டம் முகவுரை வாசிக்கும் நடைமுறை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஆசிரியர்கள் தினமான செப்டம்பர் 5ம் தேதி, அரசியல் அமைப்பு முகவுரையை வாசிக்கும் நடைமுறை அமல்படுத்தப்படும். இது குறித்து விரைவில் அதிகாரபூர்வ உத்தரவு வெளியிடப்படும்.அரசியல் அமைப்பு சட்டம் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே திட்டத்தின் நோக்கமாகும். பள்ளி மற்றும் எழுத்தறிவு துறையில் சில பிரச்னைகள் உள்ளன. சில பகுதிகளில் பள்ளி கட்டடங்கள் சரியில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
