வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., சி56!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., சி56!
UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM
ADDED : ஜூலை 30, 2023 01:45 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீஹரிகோட்டா:
ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இன்று (ஜூலை 30) காலை 6:30 மணியளவில் இஸ்ரோவின் பி.ஸ்.எல்.வி சி56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.சிங்கப்பூரின் டிஎஸ்-எஸ்ஏஆர் புவி கண்காணிப்பு செயற்கை கோளை ராக்கெட் சுமந்து சென்றது. இது தவிர மேலும் 7 செயற்கை கோள்களும் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டன. பூமியிலிருந்து 535 கி.மீ., உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பினை ஆராயவும் தட்ப வெப்ப மாற்றங்களை ஆராயவும் செயற்கைக்கோள் பயன்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
