தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வு


UPDATED : அக் 17, 2015 12:00 AM

ADDED : அக் 17, 2015 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2015 12:00 AM ADDED : அக் 17, 2015 11:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
:அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிக்கை: 

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி ஜூலை 1ம் தேதி முதல் 6 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஜூலை 1 முதல் 6 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு 366 ரூபாய் முதல் 4,620 ரூபாய் வரை சம்பள உயர்வு; ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 183 ரூபாய் முதல் 2,310 ரூபாய் வரை உயர்வு கிடைக்கும்.

அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இதனால் 18 லட்சம் பேர் பயன்பெறுவர்; ஆண்டுக்கு 1,501 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார். தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கும், தனிப்பட்ட தொகை உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை நிதித்துறை அரசு செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

அதன் விவரம்:
 

அரசு ஊழியர்களைப் போலவே மாதத்திற்கு, 600 ரூபாய் வரை திருத்தப்பட்ட தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு, தனிப்பட்ட தொகையாக மாதம் 20 ரூபாய்; 600 ரூபாய்க்கு மேல் பெறும் பணியாளர்களுக்கு 40 ரூபாய் ஜூலை 1 முதல் இருந்து உயர்த்தி வழங்கப்படும். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பருக்கான தனிப்பட்ட தொகை உடனடியாக ரொக்கமாக வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us