தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் நடத்திய ஓவியப் போட்டியில் 8 ஆயிரம் பேர் பங்கேற்பு

தினமலர் நடத்திய ஓவியப் போட்டியில் 8 ஆயிரம் பேர் பங்கேற்பு

தினமலர் நடத்திய ஓவியப் போட்டியில் 8 ஆயிரம் பேர் பங்கேற்பு


UPDATED : பிப் 05, 2015 12:00 AM

ADDED : பிப் 05, 2015 12:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 05, 2015 12:00 AM ADDED : பிப் 05, 2015 12:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையை முன்னிட்டு, ’தினமலர்’ சார்பில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில், 8 ஆயிரத்துக்கும் அதிகமான ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளனர் மாணவர்கள்.

நமது நாட்டின் 66வது குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக, பராக் ஒபாமா பங்கேற்றது, இந்திய-அமெரிக்க உறவில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது. ஒபாமாவை வரவேற்கும் விதமாக ’தினமலர்’ நாளிதழ் சார்பில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதிலிருந்தும் 8 ஆயிரத்திற்கும் அதிகமான ஓவியங்கள் வந்து குவிந்தன. ஒபாமாவுடன், நமது பிரதமர் மோடியையும் சேர்த்து வரைந்து, பல மாணவர்கள் அசத்தியிருந்தனர். சிறந்த ஓவியங்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

கோவை ரவிராஜ் லலித் கலாஷேத்ரா செயல் இயக்குனர் ரவிராஜ் தலைமையில், ஓவியத்துறை தலைவர் முருகேஷ், ஓவிய ஆசிரியர்கள் இந்துமதி, வித்யா, ஸ்நேகல் ஜெயின், மதுரபாஷினி மற்றும் ’தினமலர்’ ஆசிரியர் குழுவினர், ஓவியங்களைப் பரிசீலித்து வருகின்றனர்.

தேர்ந்தெடுக்கப்படும் மிகச்சிறந்த ஓவியத்துக்கு சிறப்புப் பரிசாக 15 ஆயிரம் ரூபாய், முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 7,500 ரூபாய், மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாய், ஆறுதல் பரிசாக 21 நபர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும், ’தினமலர்’ நாளிதழ் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். போட்டியின் முடிவுகள், விரைவில் அறிவிக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us