UPDATED : மே 11, 2011 12:00 AM
ADDED : மே 11, 2011 11:40 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை திட்டத்தில் மீட்கப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்ட அனைவரும், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்டத்தில் மீட்கப்படுவோர், அவரவர் வயதுப்படி சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, மறு கல்வியாண்டில் ரெகுலர் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். இதில், பிளஸ் 2 தேர்வு எழுதிய 9 மாணவியர், 7 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் விருதுநகர் கோபுரம் காலனியைச் சேர்ந்த மாணவி மகேஸ்வரி 1,053 மதிப்பெண் பெற்றுள்ளார்.
