தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.ஆர்.எம். பல்கலை கவுன்சிலிங் அறிவிப்பு

எஸ்.ஆர்.எம். பல்கலை கவுன்சிலிங் அறிவிப்பு

எஸ்.ஆர்.எம். பல்கலை கவுன்சிலிங் அறிவிப்பு


UPDATED : மே 12, 2011 12:00 AM

ADDED : மே 12, 2011 11:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 12, 2011 12:00 AM ADDED : மே 12, 2011 11:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை: எஸ்.ஆர்.எம். பல்கலையில், பி.டெக். மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், ஜூன் 12 ல் இருந்தும், எம்.டெக். - எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளுக்கான கவுன்சிலிங், ஜூன் 17ல் இருந்தும் நடைபெறும் என பல்கலை இணைவேந்தர் ரவி தெரிவித்தார்.


எஸ்.ஆர்.எம். பல்கலை பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்காக, அகில இந்திய அளவில் ஏப். 23ல் நுழைவுத்தேர்வை நடத்தியது. நாடு முழுவதும் 190 மையங்களில், இத்தேர்வுகள் நடந்தன. இதில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 126 பேர் பங்கேற்றனர். நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த ஏப். 8ல் பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டன.


இதையடுத்து, மாணவர் சேர்க்கை குறித்து பல்கலை இணைவேந்தர் ரவி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, "பி.டெக். நுழைவுத் தேர்வில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த வைபவ் குமார் முதலிடம் பெற்றுள்ளார். முதல் பத்து இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு, பல்கலை நிறுவனர் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.


இந்த மாணவர்களுக்கான கல்விச் செலவு முழுவதையும் பல்கலையே ஏற்கும். அத்துடன், மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படும். மேலும், பல்கலை சார்பில், "மெரிட் ஸ்காலர்ஷிப்" திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இதைப்பெற, நுழைவுத் தேர்வில் முதல் 8,000 இடங்களுக்குள் இடம் பெற்றிருக்க வேண்டும்.


சி.பி.எஸ்.இ. அல்லது ஸ்டேட் போர்டு தேர்வில் 95 சதவீதத்திற்கு அதிகமாக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வில், முதல் 10 ஆயிரம் இடங்களில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் 4,810 பேர் இடம் பெற்றிருக்கின்றனர். உ.பி.,யில் இருந்து 973 பேரும், தமிழகத்தில் இருந்து 749 பேரும் இடம் பெற்றுள்ளனர். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 3,719 பேரும், ஸ்டேட் போர்டு மாணவர்கள் 6,281 பேரும் முதல் 10 ஆயிரம் பேரில் இடம் பெற்றிருக்கின்றனர்.


பி.டெக். சேர்க்கை கவுன்சிலிங், ஜூன் 12 முதல் 16 வரையும், எம்.டெக். - எம்.பி.ஏ. - எம்.சி.ஏ. ஆகிய படிப்புகளுக்கான சேர்க்கை, ஜூன் 17, 18 ல் நடைபெறும். இதுகுறித்து சம்பந்தபட்ட மாணவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்" என்று ரவி கூறினார். பேட்டியின்போது, பல்கலை பதிவாளர் சேதுராமன், இயக்குனர் (அட்மிஷன்) முத்துசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us