தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மறுகூட்டலில் மாணவர்கள் அதிகளவு ஆர்வம்

மறுகூட்டலில் மாணவர்கள் அதிகளவு ஆர்வம்

மறுகூட்டலில் மாணவர்கள் அதிகளவு ஆர்வம்


UPDATED : மே 13, 2011 12:00 AM

ADDED : மே 13, 2011 12:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2011 12:00 AM ADDED : மே 13, 2011 12:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கடந்தாண்டில், விடைத்தாள் திருத்துவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பலருக்கும், மறுகூட்டலில் அதிக மதிப்பெண் கிடைத்ததால், நடப்பாண்டில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில், மார்ச் மாதத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது. இதில் 7.16 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவு மே 9ம் தேதி வெளியானது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தோல்வியை தழுவியுள்ளனர். இத்தேர்வில் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மே 11ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.


விடைத்தாள் நகல் பெற, மொழிப்பாடம் மற்றும் ஆங்கில பாடம் ஒவ்வொன்றுக்கும் 550 ரூபாய், இதர பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் 275 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். மதிப்பெண் மறுகூட்டலுக்கான கட்டணமாக முதன்மை மொழி, ஆங்கிலம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் 305 ரூபாய், ஏனைய பாடங்கள் அனைத்துக்கும் 205 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள்கள் தேடி எடுக்கப்பட்டு, நகல் கேட்கும் மாணவர்களுக்கு நகலும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஆசிரியர்களை கொண்டு மறுகூட்டலுக்கும் ஏற்பாடு செய்யப்படும். விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியரின் கவனக்குறைவால் ஏதேனும் மதிப்பெண்கள் விடுபட்டிருந்தால், அவை மறு கூட்டலில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


கடந்த ஆண்டு, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் கவனக்குறைவால், இதுபோன்ற குளறுபடிகள் ஏராளமாக நடந்திருந்தது. கடந்த ஆண்டில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பெரும்பாலான மாணவ, மாணவியருக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்தது. சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், மறுகூட்டலில் கிடைத்த கூடுதல் மதிப்பெண்ணால் மாவட்டத்தில் முதல் இடத்தையும் பிடிக்க முடிந்தது. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் கவனக்குறைவாக இருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது.


இந்நிலையில், நடப்பாண்டு கணிதத்தேர்வில், பல கேள்விகள் சுற்றி வளைத்து கேட்கப்பட்டிருந்தன. இதனால் நன்கு புரிந்து படித்த மாணவர்கள் மட்டுமே கணித பாடத்தில் அதிக மதிப்பெண் எடுக்க முடிந்தது. சராசரி மாணவர்கள் பெரும்பாலும் கணிதப்பாடத்தில் தேர்ச்சி பெற தவறியுள்ளனர். அதிலும் கிராமப்புற பள்ளிகளில் கணிதப் பாடத்தில் தேர்ச்சிபெற முடியாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. தேர்ச்சி பெறாதவர்களில் 70 சதவீதம் பேர் கணிதப் பாடத்தில் உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மாணவர்கள், அதிலிருந்து மீள, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முன்வந்துள்ளனர்.


மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தால், மதிப்பெண் அதிகரிக்கும் என்ற எண்ணம் மாணவர்களிடம் அதிகரித்துள்ளதால், நடப்பாண்டில், கடந்த ஆண்டை காட்டிலும் இரு மடங்கு எண்ணிக்கையில், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப முதல் இரண்டு நாளிலேயே நீண்ட வரிசையில் நின்று ஏராளமானவர்கள் விண்ணப்பங்களை பெற்று சென்றுள்ளனர். நடப்பாண்டு மறுகூட்டலிலும், கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் அளவுக்கு ஆசிரியர்களின் குளறுபடிகள் இருப்பின், அடுத்த ஆண்டு தேர்வெழுதியவர்களுக்கு ஈடாக மறுகூட்டல் விண்ணப்பம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us