தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச சிற்பக் கலை பயிற்சி

இலவச சிற்பக் கலை பயிற்சி

இலவச சிற்பக் கலை பயிற்சி


UPDATED : மே 16, 2011 12:00 AM

ADDED : மே 16, 2011 09:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 16, 2011 12:00 AM ADDED : மே 16, 2011 09:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏழை, எளிய இளைஞர்களுக்கு, கனரா வங்கி நூற்றாண்டு அறக்கட்டளை சார்பில், 18 மாத சிற்பக் கலைப் பயிற்சி வழங்கப்படுகிறது.


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, மாணகிரி சாலையில் உள்ள கனரா வங்கி கைவினைக் கலைஞர் பயிற்சி மையத்தில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. வரும் ஜூன் முதல் தேதியில் துவங்க உள்ள இப்பயிற்சி முகாமில், உணவு, தங்குமிடம் மற்றும் பயிற்சிக்கான மூலப்பொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.


பயிற்சிக் காலம் 18 மாதங்கள், முகாமில், மரசிற்பம், கல்சிற்பம், உலோக சிற்பம் ஆகிய வேலைப்பாடுகளுக்கான பயிற்சி வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர், குறைந்தபட்சம் 8ம் வகுப்பிற்கு மேல் படித்து, 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


பயிற்சியை முடிப்போருக்கு, 2 ஆண்டு சுயவேலை வாய்ப்பிற்கான சேவையும், வங்கி கடன் வழங்க முன்னுரிமையும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 04565-232423, 94874 12948 ஆகிய தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கனரா வங்கி செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us