தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிதிப்பற்றாக்குறையில் சிக்கியுள்ள பிரிட்டன் பல்கலைகள்

நிதிப்பற்றாக்குறையில் சிக்கியுள்ள பிரிட்டன் பல்கலைகள்

நிதிப்பற்றாக்குறையில் சிக்கியுள்ள பிரிட்டன் பல்கலைகள்


UPDATED : மே 17, 2011 12:00 AM

ADDED : மே 17, 2011 01:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2011 12:00 AM ADDED : மே 17, 2011 01:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு


ஏனெனில், தற்போது பிரிட்டனில் பெரும் நிதிப்பற்றாக்குறையினால், ஏராளமான பல்கலைக்கழகங்கள் சில பாடப்பிரிவுகளை ரத்து செய்துவிட்டு, பேராசிரியர்களை வீட்டிற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது.


வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அந்நாட்டு அரசு, ஆராய்ச்சிக்காகவும், படிப்பிற்காகவும் அளிக்கும் நிதியினைக் கொண்டு பிரிட்டனின் சுமார் 120 பல்கலைக்கழகங்கள் இதுவரை தாராளமாக செலவு செய்து வந்தது.


இந்திய மாணவர்கள் படிப்பிற்காக பிரிட்டன் செல்வது 18ம் நூற்றாண்டுகளிலேயே துவங்கிவிட்டது. இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே வருகிறது.


ஆனால் தற்போது பிரிட்டனின் டேவிட் காமரூன் அரசு, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பெருமளவு நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. இதனால், வெளிநாட்டு மாணவர்கள் பிரிட்டனில் கல்வி பயில்வதற்கு ஆகும் செலவு இரட்டிப்பாகியுள்ளது.


பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிகமாக கட்டணம் செலுத்தும் நிலையில், இந்திய மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் ஆளாகியுள்ளனர்.


மேலும், பிரிட்டன் பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் பல ஏஜென்சிகளை நடத்தி இந்திய மாணவர்களை கவர்கின்றன. இந்தியாவில் இருக்கும் கல்வி முறை மீது மாணவர்கள் கொண்டுள்ள அதிருப்தியை பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தன.


பல பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு மாணவர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணத்தைக் கொண்டுதான் அதிகளவு நிதியை திரட்டுகின்றன. ஆனால், தற்போதைய நிதிப்பற்றாக்குறையால், வெளிநாட்டு மாணவர்கள் விரும்பி பயிலும் பல பாடப்பிரிவுகளை ரத்து செய்யும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளன. உதாரணமாக லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் சுமார் 70 விழுக்காடு பாடப்பிரிவுகளை ரத்து செய்கின்றன. வரலாறு, இலக்கியம், கலை, கரீபியன் பாடப்பிரிவுகள், நவீன மொழிகள் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


இதனால், இலக்கியம், கலை, மொழி, கல்விப் பாடங்கள் நடத்தும் பேராசிரியர்களுக்கு இது கடினமான காலமாகியுள்ளது. வேறு நாட்டு பல்கலைக்கழகங்களில் வேலை தேடும் நிலை அவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.


பாடப்பிரிவுகளுக்கு திடிரென கல்விக் கட்டணத்தை உயர்த்தியதால், மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனை எதிர்பார்க்காத பல்கலைக்கழகங்கள், கல்விக் கட்டண உயர்வை குறைத்துவிட்டு, செலவினக் குறைப்பையும், ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதையும் மேற்கொண்டு வருகிறது.


பேராசிர்யர்கள், விரிவுரையாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் பல பல்கலைக்கழகங்களில் செயல்படுத்தப்படுகிறது. இது குறித்து லண்டனில் பணியாற்றி வரும் இந்திய பேராசிரியர் ஒருவர் கூறுகையில், இங்கு நான் கடந்த 23 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். அடுத்து என்ன நடக்கும் என்று நிச்சயமாகத் தெரியவில்லை. என்னோடு பணியாற்றும் பலரும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பணி வாய்ப்புக்காக விண்ணப்பித்திருக்கிறார்கள். உயர்கல்வியில் அதிக முதலீடுகள் போடுவதில் தற்போது இந்தியாதான் சிறந்ததாக விளங்குகிறது என்றார்.


தற்போதைய நிலவரப்படி, பிரிட்டனில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் கல்விக் கட்டணத்தை உயர்த்துவது, சில பாடப்பிரிவுகளை மூடுவது, பேராசிரியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, லாபமீட்டும் பாடப்பிரிவுகளை மட்டும் நடத்துவது என பல்வேறு கொள்கைகளை பின்பற்றத் துவங்கிவிட்டன. எனவே, பிரிட்டன் பல்கலையில் சேர்க்கை பெறும் முன், நன்கு தீர ஆராய வேண்டியது அவசியமாகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us