UPDATED : மே 18, 2011 12:00 AM
ADDED : மே 18, 2011 10:46 AM
இந்திய ரயில்வேயின் போலீஸ் பிரிவில் சப்இன்ஸ்பெக்டர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 511 காலியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு
இந்திய ரயில்வே போலீசின் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.07.2011 அன்று 20 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
ரயில்வே போலீசின் துணை ஆய்வாளர் பதவிக்கு ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதர தகவல்கள்
ரயில்வே போலீசின் சப்இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.150/ கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை டி.டி., அல்லது போஸ்டல் ஆர்டராக அனுப்பலாம். டி.டி., அல்லது போஸ்டல் ஆர்டரை Chief Accounts Officer ____________ Railway என்ற பெயரில் விண்ணப்பிக்கும் பகுதியான அலகாபாத், கோல்கட்டா, மும்பை, செகந்திராபாத் போன்ற ஏதாவது ஒரு மையத்தில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். இதன் பின் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப மாதிரியில் விண்ணப்பத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து தொடர்புடைய ரயில்வே மண்டலத்தின் Chief Security Commissioner அவர்களின் விலாசமிட்டு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் 29.05.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இந்தப் பணி குறித்த முழு விபரங்கள் இந்திய ரயில்வேயின் இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. முழு விபரங்களையும் அறிய இணைய தளத்தைக் கட்டாயம் பார்க்கவும்.
இணைய தள முகவரி: http://indianrailways.gov.in
