தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கான உங்களால் முடியும் நிகழ்ச்சி

மாணவர்களுக்கான உங்களால் முடியும் நிகழ்ச்சி

மாணவர்களுக்கான உங்களால் முடியும் நிகழ்ச்சி


UPDATED : மே 19, 2011 12:00 AM

ADDED : மே 19, 2011 03:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 19, 2011 12:00 AM ADDED : மே 19, 2011 03:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலையில் நடைபெறும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த நிகழ்ச்சியை தினமலர் நடத்துகிறது.


இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர். ரைமண்ட் உத்தரியராஜ், கவுன்சிலிங் விதிமுறைகளை விளக்குகிறார். 


தமிழகத்தில் உள்ள பல்வேறு இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் கல்லூரிகளில் வழங்கப்பம் பாடப்பிரிவுகள் குறித்து பேசுகிறார் கல்வி ஆலோசகர் ரமேஷ் பிரபா.


இதுமட்டுமல்லாமல், நிகழ்ச்சிக்கு வரும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நேரடியான கேள்விக்கும் இவர்கள் பதிலளிக்கிறார்கள்.


உங்களால் முடியும் நிகழ்ச்சி மே 21ம் தேதி சனிக்கிழமை காலையில் சின்மயா ஹெரிடேஜ் சென்டர், ஹாரிங்டன் ரோடு சேத்துப்பட்டு, சென்னை - 31 முகவரியில் காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 வரை நடைபெறுகிறது.


நிகழ்ச்சியை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் குத்து விளக்கேற்றி துவக்கி வைக்கிறார்.


இதே நிகழ்ச்சி மாலையில் ஜெயகோபால் கரோடியோ தேசிய உயர்நிலைப் பள்ளி, தாம்பரம் சானிடோரியத்தில், மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது.


நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலையின் கட்-ஆப் உள்ளிட்ட பல விவரங்கள் அடங்கிய கவுன்சிலிங் வழிகாட்டி புத்தகம் இலவசமாக வழங்கப்படும். அனுமதி இலவசம்.


பொறியியல் கவுன்சிலிங் செல்லவிருக்கும் மாணவர்கள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடையுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us