தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாடங்களை தேர்வு செய்வது எப்படி?

பாடங்களை தேர்வு செய்வது எப்படி?

பாடங்களை தேர்வு செய்வது எப்படி?


UPDATED : மே 23, 2011 12:00 AM

ADDED : மே 23, 2011 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2011 12:00 AM ADDED : மே 23, 2011 10:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி பேசியதாவது: மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில் இந்த ஆண்டு கட்-ஆப் உயரும். மாணவர்கள் அதிகமாக மதிப்பெண் வாங்குவது இதற்கு காரணம்.


பி.இ., கம்ப்யூட்டர் அறிவியலுக்கும் (சி.எஸ்.), தகவல் தொழில்நுட்ப படிப்புக்கும் (ஐ.டி.,) பெரிய வித்தியாசம் இல்லை. ஐ.டி., படிப்பில் நான்கு பாடங்கள் கம்ப்யூட்டர் படித்தால், கம்ப்யூட்டர் அறிவியலில் 40 பாடங்கள் படிக்க வேண்டும். வேலை கிடைப்பதும் எளிது. கட்-ஆப் 198க்கு மேல் இருந்தால் அண்ணா பல்கலை, தியாகராஜர் கல்லூரி உட்பட சிறந்த ஐந்து கல்லூரிகளில் எந்த பாடத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்.


அனைத்திற்கும் ஒரே வித வேலை வாய்ப்பு கிடைக்கும். 185 முதல் 195 மதிப்பெண் வரை எடுத்தவர்கள் கம்ப்யூட்டர் அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பத்தை தேர்வு செய்யலாம். இ.இ.இ., மற்றும் இ.சி.இ., படிக்க நினைத்தால், பி.இ., இரண்டாம் ஆண்டிலிருந்து கேட் தேர்வுக்கு தயாராக வேண்டும். பி.இ., முதல் வகுப்புடன், கேட் தகுதி பெற்றால் இஸ்ரோ, பாபா அணுமின் நிலையங்களில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் உண்டு. கேட் தேர்வு இரண்டரை ஆண்டுகள் செல்லும். மெக்கானிக்கல், சிவில் படிப்பில் சேர்ந்தால் எம்.இ., படிக்க வேண்டும்.


கேட் தேர்வில் மெக்கட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் கிடையாது என்பதால், பி.இ.யில் இப்பாடங்களை தேர்வு செய்யும் போது யோசிக்க வேண்டும். எந்தப் பாடத்தை தேர்ந்தெடுத்தாலும், நான்கு ஆண்டுகள் படிப்பதுடன், நூலகத்திற்கு செல்ல வேண்டும், என்றார். கவுன்சிலிங் நடைமுறை குறித்து குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. மதுரை நிகழ்ச்சியை செயின்ட் மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி, ஆண்டிபட்டி பாரத்நிகேதன் பொறியியல் கல்லூரிகள் இணைந்து வழங்கின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us